ஆதி துணை ஆதியே துணை ஆதியை அறிய குருவே துணை தந்தை தாய் கடமை தான் மறவாதே ஆதிமூலமே அதிசய சக்தி என்ற வேத ரகசியத்தை எங்களுக்கெல்லாம் தலைமேல் ஏற்றி பிறவிப் பிணி என்னும் மரணத்திலிருந்து காத்து ரட்சித்த எம்குலதெய்வம் பிரம்ம மெய்வழிசாலை ஆண்டவர்கள் திருவடியை போற்றி நமஸ்கரித்து, இக் கல்வி பணியை நாங்களும் பங்காற்ற வித்தாக இருக்கும் எமது முன்னோர்கள் மெய்வழி துரைசாமி படையாட்சி மெய்வழி அஞ்சலை அம்மாள் ஆகியோரின் குமாரர் மெய்வழி தவக்குடி அனந்தர் அமுத வல்லி ஆனந்தகி ஆகியோரின் அடியொற்றி அவர்களின் நல்லாசியுடன் எம்பகுதி மக்களின் அறியாமையை அகற்றி அன்பு அறிவு ஒழுக்கத்துடன் கூடிய நம்தாய் திருநாட்டை உயர்த்துவதற்கு உரியவல்லவர்களை, நல்லவர்களை உருவாக்குவதே எம்நோக்கம் அதற்கு உறுதுணை புரியக் கூடிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நன்றி. எமதுமாணவர்கள் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்து உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்ட வாழ்த்துகள்.
Correspondent
Executive Director